காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
காட்பாடி அருகே காட்டு பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வன அதிகாரிகள் வசூல் செய்தனர்.
வேலூர்,
அதேபோல் முள்வேலியில் சிக்கி இறந்த காட்டுப்பன்றியை கூறுபோட்டு உணவு சமைத்த தம்பதிக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
காட்பாடியை அடுத்த பனமடங்கி அருகே உள்ள காப்பு காட்டில் காட்டுப்பன்றிகள், மான் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. அந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வேலூர் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் உத்தரவின்பேரில் வேலூர் வனசரகர் குமார், வனவர் அருள்ஆனந்த், வனக்காப்பு அலுவலர் மணி, வனக்காவலர் ஈஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பனமடங்கி காப்பு காட்டில் சோதனை நடத்தினர். அப்போது செம்மன்குட்டை சரகத்தில் ஒருவர் காட்டு பன்றியை கூறுபோட்டுக்கொண்டிருந்தனர்.
ரூ.35 ஆயிரம் அபராதம்
இதையடுத்து வனசரகர் குமார் தலைமையிலான வன அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காட்பாடியை அடுத்த சின்னகீழ்முட்டுகூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 45) என்பதும், செம்மன்குட்டை சரகத்தில் சுற்றித்திரிந்த காட்டு பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து வன அதிகாரிகள், காட்டு பன்றியை வேட்டையாடியதற்காக பாஸ்கரனுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். மேலும் அவரிடம் காட்டு பன்றியின் கறியை பறிமுதல் செய்து, அதை தீயில் கொளுத்தினர்.
‘இதுபோன்று வன உயிரினங்களை வேட்டையாடினால் முதல் கட்டமாக அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து வன உயிரினங்களை வேட்டையாடினால் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தம்பதி சிக்கினர்
குடியாத்தம் வனச்சரகம் கல்லப்பாடியை அடுத்த கணவாய்மோட்டூர் ஸ்ரீராமுலுபட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 30). எலக்ட்ரீஷியன். இவருக்கு சொந்தமான நிலம் வனப்பகுதியையொட்டி உள்ளது. அந்த நிலத்தை சுற்றி இவர் வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இவரது வயலுக்குள் காட்டுப்பன்றி ஒன்று புகுவதற்கு முயன்றுள்ளது. ஆனால் அந்த பன்றி முள்வேலியில் சிக்கி இறந்து விட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை தர்மலிங்கம் மற்றும் அவரது மனைவி மோகனா (20) ஆகியோர் நிலத்துக்கு சென்றனர். அப்போது காட்டுப்பன்றி இறந்து கிடந்ததை அவர்கள் பார்த்தனர். அதனை வனத்துறையினரிடம் அவர்கள் முறைப்படி ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு தெரிவிக்காமல் காட்டுப்பன்றி இறைச்சியை கூறுபோட்டு கறி சமைத்தனர்.
பிடிபட்டனர்
இது குறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் குமார், வனவர்கள்அரி, தரணி மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சமைக்கப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சியுடன் கூடிய சமைத்த உணவையும், சமைக்காத இறைச்சியையும் அவர்கள் கைப்பற்றினர்.
இதனையடுத்து இருவருக்கும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இருவருக்கும் தலா ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். அந்த தொகையை செலுத்தியதையடுத்து அவர்களை வனத்துறையினர் விடுவித்தனர்.

Next Story