ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்
குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறினார்.
நாகர்கோவில்,
சாலை பாதுகாப்பு வாரவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று தொடங்கியது. வருகிற 23–ந் தேதி வரை இந்த சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு “உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தைக் காக்கும், சாலையில் விழிப்புடன் இருப்பீர்“ என்ற கருப்பொருளை மையப்படுத்தி சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சார்பில் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு அருகே சாலை பாதுகாப்பு வாரவிழா ஆட்டோ பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் நாகர்கோவில் நகரின் பல்வேறு ஆட்டோ ஸ்டாண்டுகளைச் சேர்ந்த ஆட்டோக்கள் பங்கேற்றன. பேரணியின்போது போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும், ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடுகளும் வழங்கப்பட்டன.
பேரணி
இந்த பேரணி மணிமேடை சந்திப்பில் இருந்து அண்ணா பஸ் நிலையம், கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், கட்டபொம்மன் சந்திப்பு வழியாக நாகராஜா திடலை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் அருள்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
ஆவணங்கள் பறிமுதல்
தமிழகத்தில் விபத்துகள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டத்தில் விபத்துகள் குறைந்தாலும், விபத்தினால் ஏற்படும் மரணங்கள் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் குமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விபத்துகளை குறைப்பதற்கு தேவையான விழிப்புணர்வு காவல்துறை மூலம் மேற்கொள்ளப்படும். கல்லூரி மாணவர்கள் அதிக வேகத்தில் செல்வதால் பலர் விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி மாணவ– மாணவிகளிடையேயும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம் என்பதையும், அதன் அவசியம், பயன்கள் குறித்தும் பொதுமக்களுக்கு இந்த ஒரு வார காலத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும். தற்போது ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் வாகன சோதனை மூலம் “ஸ்பாட் பைன்“ விதித்து வருகிறார்கள். இனிமேல் இந்த நடவடிக்கையோடு நிறுத்தாமல் ஐகோர்ட்டு உத்தரவிட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். அதாவது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களின் வாகன அசல் ஆவணங்களை பறிமுதல் செய்து, ஹெல்மெட் வாங்கி ரசீதுடன் காண்பித்தபிறகுதான் பறிமுதல் செய்யப்பட்ட அசல் ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.
ஒத்துழைப்பு
எனவே ஹெல்மெட் வாங்காதவர்கள் இந்த ஒரு வார காலத்தில் ஹெல்மெட் வாங்கிவிடுமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சாலை பாதுகாப்பு வாரவிழா முடிந்தபிறகு போலீசாரால் ஐகோர்ட்டு உத்தரவுப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் விபத்துகளை குறைக்கவும், விபத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கவும் மேற்கொள்ளப்படுகிறது. எனவே குமரி மாவட்ட மக்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து, விபத்தில்லா மாவட்டமாக குமரி மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறினார்.

Next Story