ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மெரினாவில் இளைஞர்கள் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்காக கைதானவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை,

மு.க.ஸ்டாலின், சினிமா பிரமுகர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
சமூக வலைதளம் மூலம்...
சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி மதுரை அலங்காநல்லூர் உள்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காளை மாடுகளை பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் சமூக வலைத்தளம் மூலம் இந்த போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை 9.30 மணியளவில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடினர்.
பல்வேறு கோரிக்கைகள்
விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும், ஒவ்வொரு கிராமத்திலும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி, அதில் நாட்டு மாடு இனங்களை பாதுகாப்போடு வளர்க்க வேண்டும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தடியடி நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத தமிழக எம்.பி.க்கள் 39 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும்’. ‘பீட்டா அமைப்பே நாட்டைவிட்டு வெளியேறு’. ‘மாடுகள் எங்களது குழந்தைகள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை வைத்திருந்தனர்.
டி.ராஜேந்தர் ஏற்படுத்திய பரபரப்பு
லட்சிய தி.மு.க. தலைவரும், சினிமா பிரமுகருமான டி.ராஜேந்தர் தனது கட்சி தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு காலை 11 மணியளவில் வந்தார். அப்போது அவருடைய தொண்டர்கள் கட்சி கொடியை பிடித்துக்கொண்டு வந்தனர். இதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூட்டத்தில் இருந்து காலி தண்ணீர் பாட்டில்கள் பறந்தன. இதையடுத்து லட்சிய தி.மு.க. தொண்டர்கள் அவர்களுடைய கட்சி கொடியை கீழே இறக்கினர். அதன்பின்னர் போராட்டம் நடந்த பகுதிக்கு டி.ராஜேந்தர் வந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதில் காளை மாடுகளை யாரும் கொடுமை செய்வது இல்லை. ஆனால் இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழக இளைஞர்கள் எழிச்சி பெற்று, போராட்டத்தில் குதித்துள்ளனர். உணவின்றி உணர்வுடன் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
காளைகளை வதைக்கின்றோம் என்று கூறி இந்த இளைஞர்களை வதைக்கலாமா?. இந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் மாறி, மாறி இரட்டை வேடம் போடுகின்றன. இதனை இளைஞர்கள் வேடிக்கை பார்க்கக் கூடாது, தொடர்ந்து எழுச்சியுடன் போராட வேண்டும்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இவ்வாறு டி.ராஜேந்தர் பேட்டியளித்துக்கொண்டிருந்தபோது தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் போராட்ட களத்துக்கு வந்தார். அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுசெயலாளர் வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசினார். திரைப்பட நடிகர் மயில்சாமி, பாடல் ஆசிரியர் சினேகன், ஸ்டண்ட் நடிகர் ஜாக்குவார் தங்கம், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
பீட்டா அமைப்புக்கு தடை
போராட்டத்தில் பங்கேற்ற முகுந்தன், ஆர்.கே. கோபிநாத் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முன், பின் அறிமுகம் இல்லாதவர்கள். அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். எங்களை பொறுத்தவரையில் தமிழ் உணர்வுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.
ஜல்லிக்கட்டை இந்த தை மாதத்துக்குள் நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். இந்த பீட்டா அமைப்பு நாட்டு நாய்கள், மாடுகள் போன்ற விலங்கினங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு, மருந்து கொடுக்கிறோம் என்ற பெயரில் பிடித்து செல்கின்றனர். 15 நாட்களுக்கு பராமரிக்கின்றனர். அதன்பின்னர் ஈவு இரக்கமின்றி கொன்று விடுகின்றனர். இதுபோன்ற அமைப்பை தான் நீதித்துறையும் ஆதரிக்கிறது. இந்த அமைப்பின் செயல்பாட்டை பார்த்தால் தெருவில் நடந்து செல்லும் அப்பாவி மனிதர்களை பராமரிக்கிறோம் என்ற அழைத்து சென்று, கொலை செய்வது போன்று உள்ளது.
பீட்டா அமைப்புக்கு தமிழ்நாட்டின் நாட்டு விலங்கினங்களை அழிப்பது தான் பிரதான கொள்கையாக இருக்கிறது. இது தீவிரவாத இயக்கத்தை விட கொடுமையான அமைப்பாக உள்ளது. எனவே இந்த அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் பேச்சுவார்த்தை
நேற்று காலை தொடங்கிய இளைஞர்கள் போராட்டம் மாலையிலும் நீடித்தது. அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீஸ் கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Next Story