ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தடையை மீறி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 37 பேர் கைது
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள், வக்கீல் கீதா அன்பழகன் தலைமையில் வடக்கு வீதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
37 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தின் போது, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும், மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தி, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலைச் செய்யக்கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்த சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 37 பேரை கைது செய்து அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story