மொபட் மீது கார் மோதி இழுத்துச் சென்றது; முதியவர் காயம்


மொபட் மீது கார் மோதி இழுத்துச் சென்றது; முதியவர் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:15 AM IST (Updated: 18 Jan 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

மொபட் மீது கார் மோதி இழுத்துச் சென்றது; முதியவர் காயம்

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அருள்நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (65). இவர் நேற்று அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள அம்மா உணவகம் வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சாமிநாதனுக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே கார், மொபட்டில் சிக்கிக்கொண்டது. ஆனாலும் காரை ஓட்டி வந்த வீரபாண்டி பகுதியை சேர்ந்த மாதவராஜின் மகன் ரூபன்ராஜ் (வயது 19), காரை நிறுத்தாமல் சிறிது தூரம் ஓட்டியதால் மொபட் இழுத்துச்செல்லப்பட்டது. பின்னர் காரில் இருந்து ரூபன்ராஜ் உள்பட 4 வாலிபர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் ஏன்? காரை நிறுத்தாமல் சென்றீர்கள்? என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த வாலிபர்களின் உறவினர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து காயமடைந்த சாமிநாதன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story