எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஊர்வலம்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:15 AM IST (Updated: 18 Jan 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஊர்வலம் நடத்தினார்கள்.

சேலம்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா


மறைந்த முன்னாள் முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

அதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் அனைவரும் சேலம் கலெக்டர் அலுவலக கட்டிடம் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு திரண்டனர். பின்னர் அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உருவப்படத்திற்கு மரியாதை


இந்த ஊர்வலம் பெரியார் சிலையில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோவில், தலைமை தபால் நிலையம் வழியாக அண்ணா சிலையை சென்றடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக! என்று கோ‌ஷம் எழுப்பப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அதன் அருகே உள்ள சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. அர்ச்சுனன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.ஆர்.சேகரன், வெங்கடாசலம், எம்.கே.செல்வராஜ், விஜயலட்சுமி பழனிசாமி, செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, பாசறை செயலாளர் சதீஷ்குமார், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், பகுதி பேரவை செயலாளர் ஆக்ஸ்போர்டு பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்


சேலம் ஜங்சன் 19–வது வார்டுக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் அ.தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சூரமங்கலம் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் ரவி, பகுதி அவைத்தலைவர் முகமது அலி, 19–வது வார்டு எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சோமசுந்தரம், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் விஜயபார்த்திபன் மற்றும் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

இதுபோல சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story