4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்தது: விழுப்புரம் பஸ் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்ததையொட்டி விழுப்புரம் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறை முடிந்தது
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி முதல் 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகையை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாட அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர். இதேபோல் பல்வேறு வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்களும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருபவர்களும் விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்த நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தென்மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு சென்ற அனைவரும் மீண்டும் தாங்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு திரும்பினார்கள். அதுபோல் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருபவர்களும் தங்களது சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் புறப்பட்டனர்.
இதனால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதுபோல் பெரும்பாலானவர்கள் கார்களில் சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து சென்றதை காண முடிந்தது.
பஸ் நிலையத்தில் அலை மோதிய கூட்டம்
மேலும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வழக்கத்திற்கும் மாறாக சென்னைக்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை முதல் மாலை வரை ஏராளமான பொதுமக்கள் பஸ்சிற்காக காத்திருந்தனர். இவர்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, சேலம், ஈரோடு, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டபோதிலும் அனைத்து பஸ்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பஸ்களில் ஏறி பயணம் செய்ததை காண முடிந்தது

Next Story