மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுப்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் சாலை மறியல்; 91 பேர் கைது
விழுப்புரத்தில் மஞ்சுவிரட்டு நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 91 பேர் கைது செய்யப்பட்டனர்.
மஞ்சு விரட்டு நடத்த முயற்சி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியவில்லை. இந்த போட்டியை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் காளைகளுடன் மஞ்சு விரட்டு நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று காலை 11.30 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் 2 காளை மாடுகளுடன் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் நோக்கி ஊர்வலமாக வந்து தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்த முயன்றனர்.
தள்ளுமுள்ளு
இதுபற்றி தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜராஜன், அனுசுயா டெய்சி எர்னஸ்ட், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, மகேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்கள் அதிகாரம் அமைப்பினரை தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் போலீசாருக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசாரின் தடையையும் மீறி சிலர், சாலையில் மாடுகளை அவிழ்த்துவிட்டு மஞ்சு விரட்டு நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மாடுகளை பிடித்து சாலையோரத்தில் ஒரு கம்பத்தில் கட்டி வைத்தனர்.
சாலை மறியல்
பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பினர் புதிய பஸ் நிலையம் அருகில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் திருவெண்ணெய்நல்லூர் அரிகிருஷ்ணன், விருத்தாசலம் முருகானந்தம், புதுச்சேரி சாந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
91 பேர் கைது
உடனே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். சிலர் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்துக்கொண்டு கோஷம் எழுப்பினார்கள். அவர்களை போலீசார், குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். மொத்தம் 11 பெண்கள் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுவர்-சிறுமிகளும் அடங்குவர். இதேபோல் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் ஏழுமலை தலைமையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே 10 பேர் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். கைதான 91 பேரும் விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story