காமராஜர் அணையின் நீர்மட்டம் 7 அடியாக குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


காமராஜர் அணையின் நீர்மட்டம் 7 அடியாக குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 18 Jan 2017 3:15 AM IST (Updated: 18 Jan 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 7 அடியாக குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. காமராஜர் அணை திண்டுககல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் காமராஜர் அணை அமைந்துள்ளது. திண்டுக்கல் நகரின் தேவைக்காக இந்த அணையில் இருந்து தினமும் தண்ணீர்

செம்பட்டி,

ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 7 அடியாக குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

காமராஜர் அணை

திண்டுககல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் காமராஜர் அணை அமைந்துள்ளது. திண்டுக்கல் நகரின் தேவைக்காக இந்த அணையில் இருந்து தினமும் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் உள்பட 20–க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுககும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

மலை கிராமங்களான ஆடலூர், பன்றிமலை, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட மலை பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணைக்கு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பருவ மழையால் அணை நிரம்பி பல முறை மறுகால் பாய்ந்தது. ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இல்லை.

தட்டுப்பாடு

இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. 24 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 7 அடி மட்டுமே தண்ணீர் இருக்கிறது. நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் திண்டுககல் நகர் மற்றும் பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


Next Story