சிவகாசி அருகே அவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்


சிவகாசி அருகே அவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்
x
தினத்தந்தி 18 Jan 2017 3:30 AM IST (Updated: 18 Jan 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல இடங்களிலும் போராட்டம் நடந்து வரும் நிலையில் சிவகாசி சமத்துவபுரம் அருகே அரசு கலைக்கல்லூரியின் பின்புறத்தில் நேற்று மாலை முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 காளைகள் அவிழ்த்து

விருதுநகர்,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல இடங்களிலும் போராட்டம் நடந்து வரும் நிலையில் சிவகாசி சமத்துவபுரம் அருகே அரசு கலைக்கல்லூரியின் பின்புறத்தில் நேற்று மாலை முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வந்த அந்தக் காளைகளை இளைஞர்கள் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவை பிடிபடாமல் ஓடின. முடிவில் அந்த காளைகளை முக்குலத்தோர் புலிப்படையினர் அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர்.


Next Story