இளையான்குடி பகுதியில் உரிமம் இல்லாத மினரல் வாட்டர் விற்பனை நிறுவனங்கள் அதிகரிப்பு சுகாதாரம் இல்லாத குடிநீர் விற்கப்படுவதாக புகார்


இளையான்குடி பகுதியில் உரிமம் இல்லாத மினரல் வாட்டர் விற்பனை நிறுவனங்கள் அதிகரிப்பு சுகாதாரம் இல்லாத குடிநீர் விற்கப்படுவதாக புகார்
x
தினத்தந்தி 18 Jan 2017 3:00 AM IST (Updated: 18 Jan 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பகுதியில் உரிமம் இல்லாத மினரல் வாட்டர் விற்பனை நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. சுகாதாரம் இல்லாத குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மினரல் வாட்டர் இளையான்குடி மற்றும் அதனை சுற்றி ஏராளமான கிராமங்களில் சமீப காலமாக மினரல் வா

இளையான்குடி,

இளையான்குடி பகுதியில் உரிமம் இல்லாத மினரல் வாட்டர் விற்பனை நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. சுகாதாரம் இல்லாத குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மினரல் வாட்டர்

இளையான்குடி மற்றும் அதனை சுற்றி ஏராளமான கிராமங்களில் சமீப காலமாக மினரல் வாட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை விட, மினரல் வாட்டர் சுவையாக இருப்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அதனையே விரும்புகின்றனர். இதனால் தற்போது மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஆங்காங்கே புற்றீசல் போன்று முளைத்துள்ளன. ஆனால் இவற்றில் ஏராளமானவை உரிய அனுமதி பெறாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டர் தரம் தெரியாமல் உள்ளது. மேலும் நிறுவனங்களின் விற்பனை கேன்கள், பாக்கெட்டுகளில் அரசு முத்திரை இருக்காது. இதனால் அந்த கேன்கள், பாக்கெட்டுகள் தண்ணீர் சுத்தமானது தானா என்பது தெரியாமல் பொதுமக்கள் குடித்து வருகின்றனர்.

கோரிக்கை

இதேபோல் மினரல் வாட்டர் கேன்கள், பாக்கெட்டுகள் சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு ஓட்டல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த கடைகள், ஓட்டல்களிலும் இதே மினரல் வாட்டர் பயன்பாடு உள்ளது. இவ்வாறு உரிமம் இல்லாத மினரல் வாட்டர் நிறுவனங்களில் இருந்து தயார் செய்யப்பட்டு வரும் குடிநீர் சுகாதாரம் இருப்பது கிடையாது. இந்த குடிநீரால் தொற்று நோய்கள், உடல் சார்ந்த உபாதைகள் ஏற்படுகின்றன என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உரிமம் இன்றி செயல்படும் மினரல் வாட்டர் நிறுவனங்களை கண்டுபிடித்து அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தடை விதிக்க...

இதுகுறித்து நாகசாமி என்பவர் கூறியதாவது:– இளையான்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே மினரல் வாட்டர் பயன்பாடு உள்ளது. ஆனால் உரிமம் பெற்று தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா என்பது பொதுமக்களுக்கு தெரியாத நிலை உள்ளது. இவ்வாறு உரிமம் இல்லாத மினரல் வாட்டர் நிறுவனங்கள் விற்பனை செய்யும் குடிநீர் தரமற்றதாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அனுமதியின்றி செயல்படும் மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார். அதேபோல் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அனுமதி, உரிமம் இல்லாத மினரல் வாட்டர் விற்பனை நிறுவனங்களை கண்டுபிடித்து தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story