கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை வாலிபர் கைது


கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2017 4:00 AM IST (Updated: 18 Jan 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இலங்கை வாலிபர் ஒருவர் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து தனுஷ்கோடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை வவுனியா சின்னசெட்டிகுளம் பக

ராமேசுவரம்,

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இலங்கை வாலிபர் ஒருவர் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து தனுஷ்கோடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை வவுனியா சின்னசெட்டிகுளம் பகுதியை சேர்ந்த ரொபேட் ரொக்ஸன்(வயது 27) என தெரியவந்தது. மேலும் விசாரணையில் கடந்த 2011–ம் ஆண்டு இவர் கோவை முகாமில் இருந்த சவுமியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் இவர் கடந்த ஆண்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பி விட்டாராம். இந்த நிலையில் தற்போது அவரது நண்பர் இலங்கை மன்னாரை சேர்ந்த ராஜா என்பவர் மூலம் கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடி வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தனுஷ்கோடி போலீசார், பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து செல்போன், பாஸ்போர்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story