திருப்பூர் அருகே அலகுமலையில் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு
திருப்பூர் அருகே அலகுமலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கக்கோரியும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரியும், ‘பீட்டா’ அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், மாடுபிடி வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
மதுரை, கோவை மற்றும் நெல்லையில் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் தடையை மீறி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அப்போது போலீசார் தடியடி நடத்தியும், காளைகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் பல்வேறு இடங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
அறிவிப்பு
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி பவுண்டேசன், உழவர் உழைப்பாளர் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், இந்து முன்னணி, பி.ஏ.பி. பாசன சபை உள்பட சமுதாய அமைப்புகள் சார்பில் 17-ந்தேதி (நேற்று) தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும், போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கும், காளைகளை பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக அலகுமலை முருகன் கோவிலின் பின் பகுதியில் உள்ள இடம் சுத்தம் செய்யப்பட்டு போட்டிகள் நடத்த தயார் செய்யப்பட்டது. மேலும் கும்மியாட்டம், காவடியாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தனியாக மேடைகள் அமைக்கப்பட்டன. மேலும் 27 அமைப்புகளின் ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் கண்காணித்து வந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட உள்ளன என்கிற தகவல்களையும் போலீசார் சேகரித்தனர். மேலும் எந்த ஒரு காரணத்தை கொண்டும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று காலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் ஜல்லிக்கட்டை பார்வையிட கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் அலகு மலைக்கு வந்தனர். இதனால் நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகமானது. அதன்பின்னர் பசு மாடு மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்யப்பட்ட 4 காங்கேயம் இன காளைகளும் கொண்டு வரப்பட்டன. இந்த காளைகளை பார்த்ததும் பார்வையாளர்கள் கரவொலியை எழுப்பினார்கள்.
எனவே எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போலீசார் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் அமைப்பின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடு செய்து இருந்த நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் பொங்கல் வைத்து, கோபூஜைகள் நடத்தவும், கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், மஞ்சு விரட்டு நடத்தவும் போலீசார் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து முதலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் கோ பூஜைக்காக கன்றுகளுடன் பசுமாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு பசுமாட்டை இளைஞர் ஒருவர் திடீரென பிடிக்க பாய்ந்ததால் அந்த பசுமாடு மிரண்டு ஓடியது. உடனே அந்த இளைஞரை பிடித்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு
அதன்பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘வேண்டும்...வேண்டும், ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்று கோஷம் போட்டனர். மேலும் ‘பீட்டா’ அமைப்பை தடை செய்யவேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். பின்னர் போலீசாரின் தடையை மீறி திடீரென்று 4 ஜல்லிக்கட்டு காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக விடப்பட்டன. அப்போது ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் துரத்திச்சென்று பிடிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதற்கிடையில் அலகுமலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு மாடுகள் கொண்டு வர சிலர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் போலீசார் ஆங்காங்கே அவர்களை தடுத்து அலகுமலை பகுதிக்கு வரவிடாமல் செய்தனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5 மணி அளவில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story