மேட்டுப்பாளையம் அருகே மின்வேலியில் சிக்கி 2 யானைகள் சாவு
மேட்டுப்பாளையம் அருகே தென்னந்தோப்பில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 யானைகள் பரிதாபமாக பலியானது.
2 யானைகள் பலி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயியான இவர் தனது தென்னந்தோப்பை சுற்றிலும் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க 230 வோல்ட் உயர் அழுத்த மின் கம்பியை பயன்படுத்தி மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இரையை தேடி 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை, 7 வயதான ஆண் யானையும், ஒரு வயதான குட்டி ஆண் யானையும் வந்தன. பின்னர் அந்த யானைகள் பழனிசாமியின் தோட்டம் அருகே சென்றன. தோட்டத்துக்குள் செல்ல முயன்ற யானைகள் துதிக்கையால் மின்கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கியது. இதில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானையும், ஒரு குட்டி ஆண் யானையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனது. ஒரு வயது குட்டியானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டு வலியால் பிளிறியது. வலி தாங்க முடியாமல் இறந்து கிடந்த தாய் யானையை சுற்றியபடி வந்தது.
பொதுமக்களை விரட்டியது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் மின்சார வாரியத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துதிக்கையில் மின்சாரம் தாக்கி காயத்துடன் அவதிப்பட்டு வந்த குட்டியானை, அந்த பகுதியில் உள்ள மற்றொரு தோட்டத்துக்குள் புகுந்தது. வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அந்த குட்டி யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் குட்டியானை சிக்காமல் பொதுமக்களை விரட்டியது.
4 மணிநேரம் போராடி வலை மற்றும் கயிறு உதவியுடன் பிடித்து குட்டி யானையை பிடித்து கட்டினர். சோர்வுடன் காணப்பட்ட குட்டி யானையின் உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அந்த யானையை வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றி மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் உள்ள அரசு மரக்கிடங்கு வளாகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். மின்சாரம் தாக்கி இறந்த 2 யானையின் உடல்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தாசம்பாளையம் வனப்பகுதியில் 2 யானைகளும் புதைக்கப்பட்டன.
மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கியதில் நேற்று இறந்த 2 யானைகளுடன், கடந்த 13 மாதங்களில் மொத்தம் 26 யானைகள் கோவை மாவட்டத்தில் இறந்து இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story