விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு: சாராய ஆலைக்கு பூட்டுபோட்டு போராட்டம் சாராயக்கடை உரிமையாளர்கள் போராட்டம்
சாராய விலை உயர்த்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த சாராயக் கடை உரிமையாளர்கள் ஆரியபாளையத்தில் உள்ள வடிசாராய ஆலையின் நுழைவு வாயில் கதவை சாத்தி பூட்டுபோட்டு போராட்டம் நடத்தினர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சாராய விலை உயர்வு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாரா
வில்லியனூர்,
சாராய விலை உயர்த்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த சாராயக் கடை உரிமையாளர்கள் ஆரியபாளையத்தில் உள்ள வடிசாராய ஆலையின் நுழைவு வாயில் கதவை சாத்தி பூட்டுபோட்டு போராட்டம் நடத்தினர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சாராய விலை உயர்வுபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாராயக் கடைகளுக்கு வில்லியனூர் ஆரியபாளையம் பகுதியில் உள்ள வடிசாராய ஆலையில் இருந்து சாராயம் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாராயத்தின் விலை நேற்று முன்தினம் திடீரென உயர்த்தப்ட்டது. அதனால் சாராயக்கடை நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சாராய விலை உயர்த்தியதால் விற்பனை பாதிக்கப்படும், அதனால் அரசுக்கு கிஸ்தி கட்டமுடியாத நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறினார்கள். இந்த நிலையில் சாராய விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து சாராயக்கடை உரிமையாளர்கள் நேற்று வடிசாராய ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது அவர்கள் சாராய ஆலையின் நுழைவுவாயில் கேட்டை பூட்டி பூட்டு போட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து சாராயக்கடை உரிமையாளர்கள் கூறுகையில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் 125 சாராயக் கடைகள் உள்ளன. இந்த சாராயக் கடைகளை ஆண்டுதோறும் ஏலம் எடுத்து நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு ஏலத்தின்போது சாராயத்தின் விலை தற்போது உள்ளபடி ஒரு லிட்டர் 34 ரூபாய் 74 காசுகள் என்ற விலையில் வினியோகிக்கப்படும் என்றனர்.
ஆனால், தற்போது சாராயத்தின் விலையை இரவோடு இரவாக லிட்டருக்கு 5 ரூபாய் 60 காசுகள் உயர்த்தி, 40 ரூபாய் 34 காசுக்கு விற்கும்படி கூறுகிறார்கள். சாராய விலையை உயர்த்தி உள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
சாராயக்கடைகளை திரும்ப ஒப்படைப்போம்இந்த விலை உயர்வினால் சாராய விற்பனை குறைந்து அரசுக்கு செலுத்தப்படும் கிஸ்தி தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் ஏலம் எடுத்து சாராயக்கடையை நடத்தும் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தவிலை உயர்வினை அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் சாராயக்கடை உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கலால்துறையிடம் எங்களுக்களுடைய அனைத்து சாராயக்கடைகளை நடத்துவதற்கான லைசென்சுகளை திரும்ப ஒப்படைத்துவிடுவோம் என்று கூறினர்.