புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது


புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2017 3:15 AM IST (Updated: 18 Jan 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1லட்சத்து 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 12 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். லாட்டரி சீட்டுகள் விற்பனை புதுச்சேரி கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசா

புதுச்சேரி

புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1லட்சத்து 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 12 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

லாட்டரி சீட்டுகள் விற்பனை

புதுச்சேரி கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்–இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் சோனாம்பாளையம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒருவர் தடை செய்யப்பட்ட 3 எண் கொண்ட லாட்டரியை விற்பனை செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சாரம் சக்திநகர் பகுதியை சேர்ந்த கேசவன் (வயது 35) என்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனை கைது செய்து அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வண்டியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது கிருஷ்ணமூர்த்தி என்பவர் தலைமையில் 15 பேர் இதுபோல் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கணேசன், அருண் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி உள்பட 12 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story