தாம்பரத்தில் தீபா ஆதரவாளர்கள்- அ.தி.மு.க.வினர் மோதல்
தாம்பரத்தில் தீபா ஆதர வாளர்கள், அ.தி.மு.க. வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தாம்பரம், -
தாம்பரத்தில் தீபா ஆதர வாளர்கள், அ.தி.மு.க. வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தீபா ஆதரவாளர்கள்
சென்னையை அடுத்த தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அமைப்பு ஒன்றின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடத்த அனுமதி பெறப்பட்டு இருந்தது. இதில் திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் கலந்து கொள்வார் என அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் கூட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து தீபா ஆதரவாளர்கள் வந்தனர். கூட்டம் நடத்த அனுமதி கொடுத்த மண்டபத்தில் கரைவேட்டியுடன் தீபா ஆதரவாளர்கள் வந்ததால் மண்டப நிர்வாகிகள் பிரச்சினை ஏற்படும் என கூறி கூட்டத்தை நடத்த மண்டபத்திற்குள் அனுமதிக்கவில்லை.
இதற்கிடையே, அடுத்த மாதம் 24-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தீபா சென்னையில் கூறியதை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் கூட்டம் நடத்த வேண்டாம் என கூறி கிளம்ப தயார் ஆனார்கள்.
அ.தி.மு.க.வினர் தாக்குதல்
அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் வெளியூரில் இருந்து வந்து இங்கு குழப்பம் ஏற்படுத்த கூட்டம் நடத்துவதா? உங்கள் ஊரில் நடத்தவேண்டியதுதானே எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தீபா ஆதரவாளர்களை அ.தி.மு.க. வினர் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து கலைத்து அனுப்பினர். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story