மதுரவாயலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது


மதுரவாயலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2017 2:57 AM IST (Updated: 18 Jan 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மதுரவாயல் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது மதுரவாயல் தெற்கு மாடவீதியில் உள்ள பழைய வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராமாபுரத்தை சேர்ந்த பச்சையப்பன்(வயது 56), ராஜா(42), சண்முகம்(31), தயாளன்(35), ராஜேந்திரன்(30), கதிரேசன்(35), வேலு(33), அய்யர்(25), சேகர்(28), மாரிமுத்து(33), ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.3,200 பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

Next Story