எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 18 Jan 2017 2:59 AM IST (Updated: 18 Jan 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் கணேசன் தலைமையில், அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ. வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ. எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாலாஜாபாத் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உத்திரமேரூரில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை உள்பட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க.பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார் அ.தி.மு.க. கொடியேற்றி எம்.ஜி.ஆர்.படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Next Story