ஆந்திர விவசாயிகள் மதகுகளை திறந்து விட்டதால் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைவதில் தாமதம்
ஆந்திர விவசாயிகள் மதகுகளை திறந்து விட்டதால் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
செங்குன்றம்,
ஆந்திர விவசாயிகள் மதகுகளை திறந்து விட்டதால் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து கடந்த 9-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வியாழக்கிழமை அன்று ஆந்திராவுக்கு சென்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவை சந்தித்து கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு குறைந்தது 5 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி கேட்டு கொண்டார்.
மதகுகள்
அதன் பேரில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் வரை 152 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா நதி கால்வாயில் ஓரங்களில் 800-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மதகுகள் உள்ளன.
இவற்றை அங்குள்ள விவசாயிகள் திறந்து தண்ணீரை வயல்களுக்கு பாய்ச்சி கொள்வதால் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் ஓட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஜீரோ பாயிண்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.
ஆந்திராவுக்கு சென்றனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜீரோ பாயிண்டிற்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிருஷ்ணா நதி நீரை மலர் தூவி வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆந்திர விவசாயிகள் மதகுகளை திறந்து விட்டுள்ளதால் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர விவசாயிகள் திறந்து விட்டிருக்கும் மதகுகளை மூடி தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு நேற்று காலை ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 22.83 அடியாக பதிவானது. 556 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாயில் 32 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Next Story