கோவில்பட்டியில் யூனியன் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு பஞ்சாயத்து துரைசிங்கம் நகர் உள்ளிட்ட பகுதி தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு பஞ்சாயத்து துரைசிங்கம் நகர் உள்ளிட்ட பகுதி தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அப்பகுதிகளில் வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், தாலுகா துணை செயலாளர் பாபு, நகர பொருளாளர் ராஜன், மாதர் சங்க மாவட்ட தலைவி சரோஜா, நகர துணை செயலாளர் சங்கரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், போராட்ட குழுவினர் கோரிக்கை மனுவை யூனியன் ஆணையாளர் சேவுக பாண்டியனிடம் வழங்கினர். மனுவை பெற்று கொண்ட யூனியன் ஆணையாளர், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story