பொங்கல் பண்டிகை முடிந்ததால் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
பொங்கல் பண்டிகை முடிந்ததால் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திசையன்விளை,
பொங்கல் பண்டிகை முடிந்ததால் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மீன் மார்க்கெட்
திசையன்விளை வாரச்சந்தை வளாகத்தில் மீன் மார்க்கெட் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் அங்கு மீன் விற்பனை நடைபெறும். திசையன்விளைக்கு அருகே உள்ள கடற்கரை கிராமங்களான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, பெருமணல் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, மணப்பாடு மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இங்கு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விற்பனை சில வாரங்களாக சற்று மந்த நிலையில் இருந்தது. பொங்கல் விடுமுறை முடிந்ததால் நேற்று திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்குவதற்கு குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பல்வேறு வகை மீன்கள்
துப்புவாளை, பன்னா, வலை மீன், நெத்திலி, குதிப்பு, சீலா, பாறை, மாவுலா, சாளை, சூடை உள்பட பல்வேறு ரக மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.
சாளை ரக மீன்கள் 10 ரூபாய்க்கு 10 முதல் 15 எண்ணிக்கை வரையிலும், கிலோவாக ரூ.50-க்கும், சீலா ரக மீன் கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரையிலும், வலை மீன் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

Next Story