திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வக்கீல்கள் பேரணி
திண்டுக்கல்லில், கோர்ட்டை புறக்கணித்துவிட்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் வக்கீல்கள் பேரணி சென்றனர்.
திண்டுக்கல்,
கணிப்பு
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள்– இளைஞர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, நேற்று திண்டுக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்.
திண்டுக்கல்லில் வக்கீல்கள் சங்கத்தில் உள்ள 627 பேரும் பணிக்கு செல்லவில்லை. பின்னர் அவர்கள் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 2 ஜல்லிக்கட்டு காளைகளுடன் பழனி சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி, மாணவர்கள் போராட்டம் நடத்துகிற கல்லறை தோட்டத்திற்கு வந்தடைந்தது. இதனால் அந்த பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் காளைகளுடன் திரும்பி சென்றனர்.
நிர்வாகிகளுடன் ஆலோசனைஇதுகுறித்து வக்கீல்கள் சங்க தலைவர் மனோகரன் கூறும்போது, மாணவர்களின் போராட்டத்திற்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளோம். அடுத்தகட்ட போராட்டம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். இதேபோல கொடைக்கானல் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் வக்கீல்கள் புறக்கணித்தனர்.