மாநகராட்சி 3-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல அலுவலகம் முற்றுகை
மாநகராட்சி 3-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பா.ஜ.க. சார்பில் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகை
திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது. மேலும் அந்த வார்டுக்குட்பட்ட பல பகுதிகளில் கழிப்பிடம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் பாதிப்படைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க. 1-வது மண்டல செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நேற்றுகாலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கோஷம்
இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க.மாவட்ட தலைவர் சின்னசாமி, 1-வது மண்டல தலைவர் ஆடிட்டர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அவர்கள் செட்டிப்பாளையம் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றும், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு உடனடியாக வீடுகட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றும், செட்டிப்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ள புதிய பொது கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்றும், ஒட்டபாளையத்தில் சாக்கடை கால்வாயும், கூத்தம்பாளையத்தில் பாதியில் நிற்கும் பொது கழிப்பிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
அதிகாரிகள் உறுதி
இதையடுத்து உதவி பொறியாளர் ராம்மோகன் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் பா.ஜ.க. 1-வது மண்டல பொது செயலாளர்கள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுச்சாமி, செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் அருள்ஜோதி, முத்து, சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story