முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கொலை வழக்கில் சரண் அடைந்த 4 பேரிடம் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி, ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை
முன்னாள் அமைச்சர் படுகொலை
காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் (வயது 65). கடந்த 3-ந் தேதியன்று நிரவியில் அவர் கட்டி வந்த திருமண மண்டப கட்டுமான பணிகளை பார்வையிடச் சென்றபோது கூலிப்படையினரால் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கடந்த 11-ந் தேதி புதுச்சேரி கோர்ட்டில் திருச்சியை சேர்ந்த பிரபு, சூரியபிரகாஷ், கார்த்திக் மற்றும் சண்முகம் ஆகிய 4 பேர் சரண் அடைந்தனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் மறுநாள் (12-ந்தேதி) குற்றவாளிகள் 4 பேரையும் காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் மற்றும் போலீசார் காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி பிரபு முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரித்த நீதிபதி, 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
23-ந் தேதி வரை போலீஸ் காவல்
இதைத் தொடர்ந்து 4 பேரும் காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து கோர்ட்டு மீண்டும் திறக்கப்பட்டதால் சரண் அடைந்த 4 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நேற்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரணை செய்த நீதிபதி பிரபு, வருகிற 23-ந் தேதி மாலை 5 மணி வரை அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (வியாழக்கிழமை) விசாரணை தொடங்கும் என்றும் தெரிகிறது.

Next Story