காரைக்கால் துறைமுகத்தில் இருந்து புதுவை அரசுக்கு ரூ.1.94 கோடி ஈவுத் தொகை
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து புதுவை அரசுக்கு ரூ.1.94 கோடி ஈவுத் தொகை நாராயணசாமியிடம் வழங்கப்பட்டது
புதுச்சேரி,
கடந்த 2006-ம் ஆண்டு காரைக்கால் துறைமுக திட்டத்தை சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் புதுவை அரசு ஒப்படைத்தது. இந்த துறைமுகத்தில் 2009-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சுமார் 35.85 மில்லியன் டன் சரக்குகள் கையாளப் பட்டுள்ளன.
இதே கால கட்டத்தில் துறைமுகத் துறை மூலம் புதுச்சேரி அரசுக்கு துறைமுக கட்டணம் மற்றும் நில குத்தகை கட்டணமாக ரூ.37கோடியே 98 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6.42 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் 3-ம் கால கட்டத்திற்கான (அக்டோபர் 2016 முதல் டிசம்பர் 2016 வரை) ஈவுத் தொகை அரசுக்கு ரூ.1கோடியே 94 லட்சம் கிடைத்துள்ளது. இதற்கான காசோலையை முதல்-அமைச்சரிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் துறைமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் காசோலையை வழங்கினர். அப்போது அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். காரைக்கால் துறைமுகம் மூலம் நடப்பு நிதியாண்டில் இதுவரை புதுவை அரசுக்கு ரூ.8 கோடியே 87லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

Next Story