அம்மா உணவகத்தில் எம்.பி. ஆய்வு


அம்மா உணவகத்தில் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 19 Jan 2017 4:24 AM IST (Updated: 19 Jan 2017 4:24 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சால்வேஷன் ஆர்மி மேல்நிலைப்பள்ளிக்கு விஜயகுமார் எம்.பி. நேற்று சென்றார்.

நாகர்கோவில்,

பள்ளியில் கலையரங்கம் கட்டுவது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை சுகுணா மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து விஜயகுமார் எம்.பி. வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களுக்கு சென்றார். அங்கு குளிர்சாதன வசதியுடனான பயணிகள் ஓய்வு அறை மற்றும் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் அமையஉள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்திற்கு சென்றும் ஆய்வு செய்தார்.

அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் நேரம் அடங்கிய டிஜிட்டல் பலகைகள் வைப்பது குறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் (ராணிதோட்டம்) திருவம்பலம், ஸ்ரீஅய்யப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story