ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
விடிய விடிய போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி புதுவையில் நேற்று முன்தினம் மாலை மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். புதுவை-கடலூர் ரோட்டில் உள்ள ரோடியர் மில் மைதானத்தில் அவர்கள் தர்ணா போராட்டத்தில் நடத்தினர். விடிய விடிய இந்த போராட்டம் நடந்தது.
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். 2-வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்தது. புதுவை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை சக மாணவர்கள் போராட்டத்துக்கு அழைத்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிகளில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேனர்களை ஏந்தியபடி ரோடியர் மில் நோக்கி தமிழ் இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், மோட்டார் சைக்கிள்களிலும் தனித்தனி குழுக்களாக சாரை சாரையாக வந்தனர்.
நிரம்பி வழிந்த சாமியானா பந்தல்
போராட்டம் நடந்த ரோடியர் மில் மைதானம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் குவிந்தனர். அங்கு போடப்பட்டு இருந்த சாமியானா பந்தல்களில் இருந்தபடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அதிக அளவில் மாணவ, மாணவிகள் வந்து இருந்ததால் சாமியானா பந்தல் நிரம்பி வழிந்தது.
இதனால் பெரும்பாலான மாணவர்கள் வெயிலில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெற்றோர்கள் பலர் தங்களது இருசக்கர வாகனங் களில் மாணவ, மாணவிகளை அழைத்து வந்து போராட்ட களத்தில் விட்டுச் சென்றனர். எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளையும் போராட்டத்துக்கு சிலர் அழைத்து வந்து இருந்தனர்.
அரசியல்வாதிகளின் ஆதரவு நிராகரிப்பு
போராட்ட களத்தில் மாணவர்கள் உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டனர். இதனால் ரோடியர் மில் மைதானம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. மாணவர்களின் போராட்டங்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர் சங்கங்கள் ஆதரவு அளித்திருந்தன. அந்த அமைப்புகளின் நிர்வாகிகளும் போராட்ட களத்தில் இருந்தனர். மாணவர்களின் தாகத்தை தணிக்கும் விதமாக சமூக அமைப்புகள் மற்றும் கடைக் காரர்கள் சார்பில் அவர் களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன. டீயும் வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து குவிந்ததால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசியல்வாதிகள் சிலர் அங்கு வந்தனர். ஆனால் அதை மாணவர்கள் நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Next Story