ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட கல்லூரி மாணவர்கள்
வேலூர், குடியாத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யக்கோரியும் நேற்று ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
மாணவர்கள் போராட்டம்
வேலூரில் நேற்று பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக காலை முதலே கல்லூரி மாணவ- மாணவிகள் வேலூர் காந்திசிலை முன்பு திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் மக்கான் சந்திப்பு, வடக்கு போலீஸ் நிலையம் வழியாக பழைய பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு திருவள்ளுவர் சிலை பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ- மாணவிகள் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில், துணை சூப்பிரண்டு ஆரோக்கியம், இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், ரஜினிகாந்த், ராமச்சந்திரன் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ரோட்டுக்கு வராதவகையில் இரும்பு தடுப்புகள் அமைத்திருந்தனர்.
3 ஆயிரம்பேர் பங்கேற்பு
பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பழைய பஸ் நிலையம் மாணவர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
காட்பாடியில் இருந்து வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோன்று வேலூர் விருப்பாட்சி புரத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அந்தப்பகுதியில் கைகோர்த்து நின்று மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
குடியாத்தம்
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று இளைஞர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குடியாத்தத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ - மாணவிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து அறப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
இதில் கல்வியாளர்கள், வக்கீல்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவ - மாணவிகள் கல்லூரி எதிரில் தரையில் அமர்ந்து அறவழி போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஆவலர்கள், மாணவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல ஜி.பி.கல்வி நிறுவனங்கள் சார்பில், கல்லூரி அலுவலகம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்வி நிறுவனங்களின் மாணவ - மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story