ஜல்லிக்கட்டு போராட்டம் ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆதரவு
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை,

ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஆர்.காந்தி தலைமையில், ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் தலைவர் நளினி, துணை தலைவர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, முன்னாள் தலைவர் பிரசன்னா, ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் முரளி, வக்கீல்கள் இரா.சிவசங்கர், ஆறுமுகம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டு முன்பு ஒன்று கூடினார்கள். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் ஐகோர்ட்டில் இருந்து மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
அதேபோல, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் பலர் மெரினா கடற்கரைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

Next Story