நந்தம்பாக்கத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் சாலை மறியல்
கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ‘பீட்டா’வை தடை செய்ய வலியுறுத்தியும் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் தனியார் தொழில்நுட்ப பூங்காவில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், பணியாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ‘பீட்டா’வை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று மாலை நந்தம்பாக்கத்தில் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த அவர்கள், ஜல்லிக்கட்டு நடக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
அப்போது போலீசார், இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை அளித்து உள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். சுமார் 1 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியலை கைவிட்டு அனைவரும் சாலையின் ஓரமாக நின்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கிண்டியில் உள்ள தனியார் நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினீயர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்கள்.

Next Story