கடலூர் மாவட்டத்தில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரிக்கை
வகுப்பு புறக்கணிப்பு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது மாணவர்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வலுத்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் முகநூல் நண்பர்கள் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். நேற்று கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, கிளை சிறைச்சாலை ரோடு வழியாக ஊர்வலமாக வந்து பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கேயே அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் கலந்து கொண்டனர். சில மாணவர்கள் கருப்பு சட்டையுடனும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் பங்கேற்றனர். வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டியும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
கடலூர் அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஆனால் அவர்களை கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் தடுத்து நிறுத்தி, ஊர்வலமாக செல்ல தடை விதித்தனர். அதைத்தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு வாகனங்கள் மூலம் வந்து பழைய கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர். குமராபுரம் தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அரசியல் கட்சியினர் ஆதரவு
மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பேசினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் மற்றும் நிர்வாகிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு, அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி கடல்தீபன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
வக்கீல்களும் கோர்ட்டு வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். மாணவர்களின் போராட்டத்தையொட்டி பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நெய்வேலி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் நெய்வேலி வட்டம் 14-ல் உள்ள ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மெயின் பஜார் காந்தி சிலை அருகே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது, இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காமல் மாணவர்கள் யாரும் கலைந்து செல்லப் போவதில்லை என்று அறிவித்து அங்கேயே போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு குடிநீர், பிஸ்கட் மற்றும் உணவு பொட்டலங்களை சமூக ஆர்வலர்கள் வழங்கி, ஆதரவு தெரிவித்தனர். மேலும், தமிழ் அகம் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம்
இதே போல் ஸ்ரீமுஷ்ணம் காந்திசிலை முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முகநூல் நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறினர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து 2 மணிநேரம் போராட்டம் நடத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பண்ருட்டி
பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, கல்லூரிக்கு சென்றனர். இதே போல் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் அருகே முகநூல் நண்பர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவு வாயிலில் உள்ள ராஜேந்திரன் சிலை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் ராஜா முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து ஊர்வலமாக பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நேற்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட்டு புறக்கணிப்பு
சிதம்பரத்தில் வக்கீல்கள் சங்க தலைவர் ஞானசேகரன், அட்வகேட் அசோசியேஷன் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்-திட்டக்குடி
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் படிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காலை 8.30 மணிக்கு கல்லூரி முன்பு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதே போல் திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சட்டப்பஞ்சாயத்து அமைப்பினர் சேர்ந்து திட்டக்குடி பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இளைஞர்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மெர்பின், சட்ட பஞ்சாயத்து ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, கவியரசன், மணி, சுந்தரேசன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்ணாடம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பெண்ணாடம் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோஷம் எழுப்பியபடி பேருந்து நிலையம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story