ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானம் எதிரே மாணவ-மாணவிகள் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மதுரை தமுக்கம் மைதானம் முன்பு பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகரமே ஸ்தம்பித்தது.
மிகப்பெரிய போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை புறநகரில் இதுவரை நடந்து வந்த போராட்டம் நேற்று மாநகரில் மிகப்பெரிய அளவில் நடந்தது. அனைத்து கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் மதுரை தமுக்கம் மைதானம் எதிரே நேற்று காலையில் அலைஅலையாக வந்து குவிந்தனர்.
மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரிகளில் இருந்து நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் நேரடியாக தமுக்கம் மைதானத்துக்கு வந்தனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. தல்லாகுளம் வழியாக பெரியார் பஸ் நிலையம் வர வேண்டிய அனைத்து பஸ்களும் அண்ணா பஸ் நிலையம், தெப்பக்குளம் வழியாக காமராஜர் சாலையில் திருப்பி விடப்பட்டன.
மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் நேரில் வந்து மாணவர்களின் போராட்டத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டார்.
முழக்கம்
தமுக்கம் அருகே குவிந்த மாணவ-மாணவிகள், பீட்டா அமைப்புக்கு எதிராகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். தமுக்கம் மைதானத்தின் வளாக சுவர் மீதும், தமிழன்னை சிலையைச் சுற்றிலும் மாணவர்கள் ஏறி நின்று கொண்டு முழக்கமிட்டனர்.
ஒரு சில மாணவர்கள் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தின் விளம்பர பலகை மீது ஏறி அமர்ந்து கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். “கீழே விழுந்து விடாதீர்கள், இறங்குங்கள்“ என மற்ற மாணவர்கள் எச்சரித்தபின், அவர்கள் கீழே இறங்கினர்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் கடைகளை அடைத்த வியாபாரிகள் மாணவர்களின் எழுச்சியை பார்த்து அவர்களுக்கு தண்ணீர் பாக்கெட், கடலை மிட்டாய் ஆகியவற்றை வழங்கினர்.
சர்வதேச சதி
போராட்டம் குறித்து மாணவர்கள் தரப்பில் கூறியதாவது:-
தமிழர்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அழிக்கும் தொடர் முயற்சியில் மத்திய பா.ஜ.க.அரசு ஈடுபட்டு வருகிறது. மாநில அரசும் மத்திய அரசை கேள்வி கேட்க திராணியில்லாமல் உள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சர்வதேச அளவில் சதி நடந்து வருகிறது. இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படி, பீட்டா அமைப்பு இந்தியாவில் காளை மாட்டை பாதுகாக்க வேண்டும் என்று போலியாக குரலெழுப்பி வருகிறது. இதற்கு மத்திய அரசு துணை நிற்கிறது.
பாடம் புகட்டுவோம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தமிழக மீனவர்கள் பிரச்சினை ஆகிய அனைத்திலும் இங்குள்ள அரசியல் கட்சியினர், பா.ஜ.க. தலைவர்கள், எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் நாடகமாடுகின்றனர். எனவே, மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பாடம் புகட்டாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று மாலை 6 மணியான பிறகும் மாணவர்கள் யாரும் கலைந்துசெல்லவில்லை.

Next Story