காதலித்த பெண்ணை திருமணம் செய்தவரை கொன்று, உடல் கால்வாயில் வீச்சு நண்பர்கள் 5 பேர் கைது
காதலித்த பெண்ணை ஆட்டோ டிரைவர் திருமணம் செய்ததால் அவரை கொன்று, உடலை கூரியர் பார்சலில் கட்டி கால்வாயில் வீசிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர்,
காதலித்த பெண்ணை ஆட்டோ டிரைவர் திருமணம் செய்ததால் அவரை கொன்று, உடலை கூரியர் பார்சலில் கட்டி கால்வாயில் வீசிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம்
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குமார்ராஜா. ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருடைய ஒரே மகன் பிரவீன்குமார் (வயது 23). ஆட்டோ டிரைவர். இவரும், சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஷபானா (21) என்ற பெண்ணும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஷபானா, புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த வழியாக அடிக்கடி ஆட்டோவில் சென்று வந்த போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த 10-ந் தேதி இரவு சவாரிக்கு செல்வதாக கூறிச்சென்ற பிரவீன்குமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் இதுபற்றி கொடுங்கையூர் போலீசில் ஷபானா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரவீன்குமாரை தேடி வந்தனர்.
நண்பர்களிடம் விசாரணை
போலீஸ் விசாரணையில் சென்னை ஓட்டேரி கொசவன்பேட்டையை சேர்ந்த கணேசன் (22) என்பவர் அடிக்கடி பிரவீன்குமார் வீட்டுக்கு வந்து செல்வதும், டவுட்டன் புவனேஸ்வரி தியேட்டர் எதிரே உள்ள ஒரு கூரியர் அலுவலகத்தில் அவர் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரிந்தது.
அவரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்த போது கணேசன் தலைமறைவாகி விட்டது தெரிந்தது. போலீசார் அந்த கூரியர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கு மாயமான பிரவீன்குமாரின் செல்போனை கண்டெடுத்தனர். அந்த போனை ஆராய்ந்த போது பிரவீன்குமார் கடைசியாக கணேசனின் செல்போன் எண்ணுக்குத்தான் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்தது.
இதனால் கணேசனின் நெருங்கிய நண்பர்களான கொசவன்பேட்டையை சேர்ந்த சிவானந்தம் (23), ஜாஸ்பர் (23), விஜய் (22) ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் பிரவீன்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. போலீஸ் விசாரணையில் 3 பேரும் கூறிய தகவல்கள் வருமாறு:-
கள்ளக்காதல்
டவுட்டனில் ஷபானா வேலை செய்து வந்த கம்பெனிக்கு கூரியர் தபால் கொடுக்க அடிக்கடி கணேசன் அங்கு சென்று வந்தார். இதனால் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அதன்பிறகு ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.
அதன்பிறகு ஷபானா, அடிக்கடி ஆட்டோவில் டவுட்டன் பகுதிக்கு வந்து சென்ற பிரவீன்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார்.
ஆனால் திருமணத்துக்கு பிறகும் அவர், தனது பழைய காதலன் கணேசனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். பிரவீன்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் கணேசன் அங்கு வந்து ஷபானாவுடன் நெருங்கி பழகி வந்தார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் எதுவும் அப்பாவியான பிரவீன்குமாருக்கு தெரியாது.
கொலை செய்ய திட்டம்
இதையடுத்து கணேசன், தனது நண்பர்களான சிவானந்தம், ஜாஸ்பர், விஜய் ஆகியோருடன் சேர்ந்து, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிரவீன்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அதன்படி சிவானந்தம், பிரவீன்குமாரின் வீட்டுக்கு சென்று, தான் செல்போன் நிறுவன பிரதிநிதி என்று கூறி இலவசமாக ஒரு சிம்கார்டு தருவதாக கூறினார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து அவரை டவுட்டனுக்கு வரவழைத்தார். அங்குள்ள ஒரு மதுக்கடை பாரில் கணேசன், ஜாஸ்பர், விஜய் ஆகியோருடன் இருந்த சிவானந்தம், அவர்களை பிரவீன்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போதே அவரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் ஆட்கள் நிறைய இருந்ததால் அந்த திட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு அவர்கள் நெருங்கி பழகினர். பிரவீன்குமார் தனது ஆட்டோவை விற்று விட்டு கார் வாங்க உதவி செய்வதாகவும் கணேசன் கூறினார். இதனால் அவர்களுக்குள் மேலும் நெருக்கம் அதிகமானது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு பிரவீன்குமாரை, கார் வாங்க உதவி செய்வதாக கூறி டவுட்டனில் உள்ள கூரியர் அலுவலகத்துக்கு கணேசன் அழைத்துச் சென்றார். அங்கு தனது நண்பர்களான சிவானந்தம், சாஸ்தா, விஜய் ஆகியோருடன் சேர்ந்து பிரவீன்குமாருக்கு மது வாங்கி கொடுத்தார். அவர் மது மயக்கத்தில் இருந்த போது 4 பேரும் சேர்ந்து பிரவீன்குமாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை கூரியர் பார்சல் செய்யும் பிளாஸ்டிக் தாளை கொண்டு சுற்றி பார்சலாக கட்டி வைத்து விட்டு சென்றனர். 2 நாட்களுக்கு பிறகு கடந்த 12-ந் தேதி கணேசன் உள்ளிட்ட 4 பேரும் கூரியர் அலுவலகத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்த சூளையை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ் (21), ஓட்டேரியை சேர்ந்த டிரைவர் ஜான்சன் (37) ஆகியோருடன் சேர்ந்து பார்சலாக கட்டப்பட்டு இருந்த பிரவீன்குமாரின் உடலை ஒரு வாகனத்தில் ஏற்றி பெரம்பூர் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசிச்சென்று விட்டனர்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பிடிபட்ட கணேசனின் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உடல் மீட்பு
இதையடுத்து பிரவீன்குமார் உடல் வீசப்பட்ட கால்வாய்க்கு அவர்களை அழைத்துச் சென்றனர். அங்கு உடல் வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். அந்த இடத்தில் இருந்து பிரவீன்குமார் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கணேசனின் நண்பர்களான சிவானந்தம், ஜாஸ்பர், விஜய் மற்றும் தினேஷ், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக பிரவீன்குமாரின் மனைவி ஷபானாவிடம் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராசா தீவிரமாக விசாரித்து வருகிறார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தலைமறைவாக உள்ள கணேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அவர் சிக்கினால்தான் இந்த கொலையில் ஷபானாவுக்கு தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட மேலும் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story