மணல் கடத்தல் வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


மணல் கடத்தல் வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 19 Jan 2017 5:21 AM IST (Updated: 19 Jan 2017 5:21 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் போலீசார் அழிஞ்சிவாக்கம் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி வந்த சுதாகர் (வயது25) என்பவரை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்,

பெரியபாளையம் போலீசார் அழிஞ்சிவாக்கம் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி வந்த சுதாகர் (வயது25) என்பவரை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட சுதாகர் மீது மணல் கடத்தியதாக 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வரும் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார்.

அதை ஏற்றுக் கொண்ட கலெக்டர், சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை பெரியபாளையம் போலீசார் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள். 

Next Story