விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:34 AM IST (Updated: 19 Jan 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டை அடுத்த கொண்டமங்களம் ஊராட்சி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பிரகாஷ் (வயது 31).

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை அடுத்த கொண்டமங்களம் ஊராட்சி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பிரகாஷ் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர் காணும் பொங்கல் அன்று தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரகாஷ் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரகாஷ் மூளைச்சாவு அடைந்திருப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதனையடுத்து அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் தானம் செய்யப்பட்டது. விபத்தில் பலியான பிரகாஷ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

Next Story