ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி இளைஞர்கள் சாலை மறியல்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி இளைஞர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:49 AM IST (Updated: 19 Jan 2017 5:49 AM IST)
t-max-icont-min-icon

அரும்பாவூர் அருகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி இளைஞர்கள் சாலை மறியல்

அரும்பாவூர்,

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே பூலாம்பாடியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி நேற்று மாலை இளைஞர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது பூலாம்பாடி மேற்கு பஸ்நிலையம் அருகே சென்றபோது திடீரென இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும், ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக, அந்த வழியாக சென்ற பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து போராட்டத்தை கைவிடக்கோரி இளைஞர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story