பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதின் மூலம் கூடுதல் தண்ணீர் எடுக்க கேரளா திட்டமா?
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதின் மூலம் கூடுதல் தண்ணீர் எடுக்க கேரளா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கேரளாவுக்கு 6 டி.எம்.சி. தண்ணீர்
காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் 240 டி.எம்.சி. தண்ணீரும் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) கேரளா 30 டி.எம்.சி. தண்ணீரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் காவிரி ஆறு கேரளாவுக்குள் பாயவில்லை. கர்நாடகம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே பாய்கிறது. ஆனால் காவிரியின் துணை ஆறுகளான கபினி ஆறு, பவானி ஆறு, பாம்பாறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள காவிரி நடுவர் நீதிமன்றம் கேரளாவுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கபினி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் 21 டி.எம்.சி. தண்ணீரும், பவானி ஆற்றில் இருந்து 6 டி.எம்.சி. தண்ணீரும், பாம்பாற்றில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீரும் கேரளா எடுத்துக்கொள்ளலாம்.
காவிரி நதிநீர் தகராறில் தொடர்புடைய கேரளாவிற்குள் காவிரி ஆறு பாயாவிட்டாலும் காவிரியின் துணை ஆறுகள் கேரளாவில் பாய்வதால் தான் துணை ஆறுகளில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள காவிரி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கு இல்லை
இதில் பவானி ஆற்றில் இருந்து 6 டி.எம்.சி.தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை எடுத்துக்கொள்வதற்காக கேரளா இதுவரை தடுப்பணைகள் எதுவும் கட்டவில்லை. பவானி ஆறு மற்றும் அதில் வந்து சேரும் சிறுவாணி ஆற்றில் இருந்து அதன் கரையோர கிராம மக்கள் மோட்டார் பம்புகள் மூலம் தற்போது தண்ணீரை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இதற்கு கணக்கு கிடையாது. எனவே பவானி ஆற்றில் இருந்து கேரள அரசு 6 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கிறதா? அல்லது அதற்கு மேல் தண்ணீர் எடுக்கிறதா? என்பது தெரியாது.
பவானி ஆற்றின் மொத்த நீளம் 100 கிலோ மீட்டர். இதில் தமிழக பகுதியான அப்பர் பவானியிலிருந்து உற்பத்தியாகி 7 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்தில் பாய்ந்து அதன் பின்னர் கேரளாவில் அட்டப்பாடி பள்ளத்தாக்கில் 48 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அதன் பின்னர் மீண்டும் தமிழகத்துக்குள் நுழைந்து 45 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து பவானி சாகர் அணையில் வந்து சேருகிறது. பவானி ஆற்றின் மொத்த நீளத்தில் 52 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்திலும், 48 கிலோ மீட்டர் தூரம் கேரளாவிலும் உள்ளது.
6 இடங்களில் தடுப்பணைகள்
இந்த நிலையில் கடந்த ஆண்டு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு ரூ.900 கோடி செலவில் அணை கட்ட முயற்சித்தபோது அதற்கு தமிழகத்தின் சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அந்த திட்டத்தை கேரள அரசு கைவிட்டது. இந்த நிலையில் தற்போது பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி, பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய 6 இடங்களில் பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய 2 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கட்டுமான பணிகள் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றன.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பவானி ஆற்றிலிருந்து கேரளா 6 டி.எம்.சி. தண்ணீர் எடுத்துக்கொள்ள காவிரி நடுவர் நீதிமன்றம் அனுமதித்துள்ள போதிலும் எவ்வளவு தண்ணீர் கேரளா எடுக்கிறது என்பது பற்றிய சரியான கணக்கீடு இல்லை. அனுமதிக்கப்பட்ட 6 டி.எம்.சி. தண்ணீரை எடுக்கிறோம் என்று வெளிப்படையாக கேரளா அறிவித்துவிட்டு அதன் பின்னர் தடுப்பணைகளை கட்டலாம். காவிரியில் எவ்வளவு தண்ணீர் விடப்படுகிறது? எந்த மாநிலம் எவ்வளவு தண்ணீர் எடுக்கிறது என்பதை கண்காணிக்கும் காவிரி மேலாண்மைவாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்பட்ட பிறகு தடுப்பணை அமைப்பதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் மேலாண்மை வாரியம் அனுமதித்தால் கேரளா தடுப்பணையை கட்டலாம்.
கூடுதல் நீர் எடுக்க திட்டமா?
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் மத்திய அரசுக்கும், காவிரி நடுவர் நீதிமன்றத்துக்கும், தமிழக அரசுக்கும் தெரியப்படுத்தாமல் தடுப்பணையை கட்டக்கூடாது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தெரியப்படுத்தாமல் தடுப்பணையை கேரளா கட்ட முயற்சிப்பது கூடுதல் தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. பவானி ஆற்றிலிருந்து கேரளா 6 டி.எம்.சி. தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது என்றாலும் அதுபற்றி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தடுப்பணையை கட்டக்கூடாது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளா முயற்சித்தது. ஆனால் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது சிறுவாணி ஆறு பவானி ஆற்றில் கலக்கும் இடமான கூடப்பட்டி என்ற இடத்துக்கு முன்பே பவானி ஆற்றில் தடுப்பணைகளை கட்டும் பணியில் கேரளா ஈடுபட்டுள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை
இதுகுறித்து கேரள நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பவானி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணைகள் மூலம் ஒரு டி.எம்.சி. தண்ணீருக்கும் குறைவான அளவிலேயே தண்ணீர் எடுக்கப்படுகிறது. இரு மாநில ஒப்பந்தங்களை மீறி வரையாற்றில் ஏராளமான தடுப்பணைகளை தமிழக அரசு கட்டி உள்ளது. அது பற்றி கேரளா எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இப்போது கட்டப்படும் தடுப்பணைகளால்தமிழகத்துக்கு செல்லும் பவானி நீர் எந்த வகையிலும் குறைய வாய்ப்பில்லை.

Next Story