புதுக்கோட்டையில் இளைஞர்கள்-மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி புதுக்கோட்டையில் இளைஞர்கள், மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை,
மேலும் பீட்டா அமைப்பிற்கு எதிராக பாடை கட்டி இறுதி சடங்கு செலுத்தப்பட்டது.
தொடர் உண்ணாவிரதம்
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அதனை தடை செய்து வரும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டும் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை திலகர் திடலில் உரிமைக்குழு மீட்பு சார்பாக இளைஞர்கள், மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலையில் தொடங்கிய போராட்டத்தின்போது கூட்டம் குறைவாகவே இருந்தது. நேரம் செல்ல செல்ல மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் ஏராளமானவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இறுதி சடங்கு
கீரமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகர் விஷால் மற்றும் நடிகை திரிஷா ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி பதாகை வைத்தனர். பின்னர் பீட்டா அமைப்பிற்கு எதிராக, ஒரு பாடையை அமைத்து அதற்கு இறுதி சடங்குகளை செய்தனர். தொடர்ந்து அந்த இடத்திற்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது, பின்னர் சண்டை சேவல்களும் கொண்டுவரப்பட்டு சேவல் சண்டையும் நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து அறிந்து மெய்யநாதன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத்தில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இரவு நடிகர் விஷால், நடிகை திரிஷா பதாகைக்கு செருப்பு மாலை அணிவித்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதேபோல கொத்தமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்நிய நாட்டு குளிர்பானங்களை சாலையில் உடைத்தனர்.
அரிமளம்
அரிமளம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், வர்த்தகர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நேற்று அரிமளம் சிவன்கோவில் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரிமளம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் அருகே உள்ள அறந்தாங்கி பாரதிதாசன் மாதிரி கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். ஆவுடையார்கோவில், காராகுடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடைசெய்யக்கோரியும் அறந்தாங்கி-நாகுடிசெல்லும் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல மறமடக்கி, எரிச்சரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியலூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்ககோரி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டியில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாணவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலுப்பூர்
இலுப்பூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் இலுப்பூர் அரசு மருத்துமனையில் இருந்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பீட்டா அமைப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story