காளையார்கோவில் அருகே கண்டுப்பட்டியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு; காளைகள் சீறி பாய்ந்தன
காளையார்கோவில் அருகே கண்டுப்பட்டியில் சமத்துவ பொங்கல் விழாவையொட்டி தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின.
சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது கண்டுப்பட்டி. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, இங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள், இந்துகள் இணைந்து கொண்டாடும் சமத்துவ பொங்கல் விழா நடைபெறும். மேலும் இதனையொட்டி மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெறுவது வழக்கம். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை காரணமாக 2 ஆண்டுகளாக மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை.
மேலும் இந்த விழாவையொட்டி இங்குள்ள மக்கள் வீடுகளில் உணவு சமைத்து, வெளியூரை சேர்ந்தவர்களுக்கு விருந்து படைப்பர்.
இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான சமத்துவ பொங்கல் விழா கண்டுப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பங்குதந்தையர்கள் மரியடெலஸ், ஆனந்த் ஆகியோர் சிறப்பு திருப்பலி வழங்கினர்.
இதனையடுத்து கோவில் முன்பு மக்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் தங்கள் வழக்கப்படி வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு விருந்து படைத்தனர்.
தடையை மீறி மஞ்சுவிரட்டு
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஞ்சுவிரட்டு தடையை மீறி நடைபெறலாம் என்பதால், கண்டுப்பட்டியில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ தலைமையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளும் இருந்தனர்.
இருப்பினும் பொங்கல் விழா முடிந்ததும், தங்கள் பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு காளைகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அழைத்து வந்தனர்.
பின்னர் போலீசாரின் கண்காணிப்பை திசை திருப்பிவிட்டு, மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் கண்டுப்பட்டியில் உள்ள கண்மாய் பகுதியில் காளைகளை அவிழ்த்துவிட்டனர். அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் விரட்டி பிடித்தனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
போலீஸ் தடியடி
மஞ்சுவிரட்டு நடப்பது குறித்த தகவலறிந்து போலீசார் கண்டுப்பட்டி கண்மாய் பகுதிக்கு விரைந்தனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன் மற்றும் காளையார்கோவில் போலீசார் மாடுபிடி வீரர்களை எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடத்தினர்.
மேலும் போலீசார் மீதும், அவர்களது வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும், 2 போலீஸ் வாகனங் களின் கண்ணாடிகளும் நொறுங்கின.
இதனால் போலீசார் மஞ்சுவிரட்டு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
பின்னர் மதியம் 3 மணி அளவில் கிராமத்திற்கு சொந்தமான கோவில் காளையை கிராமத்தினர் மரியாதை செய்து வாடிவாசல் வரை அழைத்து சென்று, சாமி கும்பிட்டு திரும்பினர்.

Next Story