ஆதரவு தெரிவிக்க வந்த தி.மு.க.வினர் மீது தண்ணீர் பாக்கெட்டுகள் வீச்சு
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நேற்று கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
இதற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தி.மு.க.வினர் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை எதிரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
காலை 9 மணி முதல் ஏராளமான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வரத் தொடங்கினார்கள். இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டங்களில் பங்கேற்று விட்டு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. பீட்டா அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும், பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர், நடிகைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். மேலும் தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
கருப்பு கொடி ஏற்றி
சுமார் 4 மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும். காட்சி பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். வருகிற 26-ந் தேதிக்குள் தமிழகத்திற்குள் ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் 26-ந் தேதி முதல் கருப்பு கொடி ஏற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு அளிக்க வந்த நிலையில் கட்சியினர் யாரும் வர வேண்டாம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களை திரும்ப அனுப்பினார்கள். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகவனம், நகர செயலாளர் நவாப் மற்றும் தி.மு.க.வினர் ஆதரவு தெரிவிப்பதற்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர்.
தண்ணீர் பாக்கெட் வீச்சு
அந்த நேரம் மாணவர்கள், இளைஞர்கள் சிலர் தி.மு.க.வினர் மீது தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கிருந்து சென்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கண்ணில் கருப்பு கொடி கட்டியும் வந்தனர். மேலும் காளைகளை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்புமணி, கணேஷ்குமார், ரவிச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story