மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்


மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:15 AM IST (Updated: 19 Jan 2017 10:08 PM IST)
t-max-icont-min-icon

மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை கொலை செய்தார்.

கோவை,

தந்தை கொலை

கோவை பீளமேடு புதூர் மறைமலை அடிகள் நகரை சேர்ந்தவர் அம்மாசையப்பன்(வயது 81). இவர் நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது, புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் விசாரணையில் அம்மாசையப்பனை மகன் பாலசந்திரன்(40) கொலை செய்தது தெரியவந்தது. பாலசந்திரனுக்கு திருமணமாகி விட்டது. மனைவியை பிரிந்து வாழ்கிறார். அம்மாசையப்பனும், பாலசந்திரனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பாலசந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்து வந்தார்.

மகனுக்கு வலைவீச்சு

அதுபோல சம்பவத்தன்றும் பாலசந்திரன், தந்தை அம்மாசையப்பனிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தரவில்லை. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாலசந்திரன் வீட்டில் இருந்த கம்பியால் தந்தையை குத்தி கொலை செய்து விட்டு தப்பி விட்டார். அவர் செல்லும்போது வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் அம்மாசையப்பன் கொலை செய்யப்பட்டது யாருக்கும் தெரியவில்லை. அவர் வெளியே சென்றிருப்பதாக அக்கம் பக்கத்தினர் நினைத்திருந்தனர். ஆனால் உறவினர்கள வீட்டுக்கு வந்தபோது தான் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் பாலசந்திரனை பீளமேடு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story