பழைய தியேட்டர் சந்திப்பு பகுதியில் மார்த்தாண்டம் மேம்பால பணிகள் தொடக்கம்
மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு பகுதியில் மேம்பால பணிகள் தொடங்கியது.
குழித்துறை,
மேம்பால பணிகள்
மார்த்தாண்டத்தில் வெட்டுமணியில் இருந்து பம்மம் வரையில் 2½ கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இதன் முதற்கட்டமாக வெட்டுமணியில் இருந்து மார்த்தாண்டம் ஜங்ஷனுக்கு அருகே ஸ்டேட் வங்கி பகுதிவரை தேசிய நெஞ்சாலையின் நடுவே மேம்பாலத்துக்கான தூண்கள் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பழைய தியேட்டர் பகுதியில் தொடக்கம்
இந்த நிலையில் மார்த்தாண்டம் சந்திப்புப் பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழைய தியேட்டர் சந்திப்பு பகுதியில் மேம்பால பணிக்காக சாலையின் நடுவில் தூண்கள் அமைப்பதற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன
இதனால் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து மாற்றங்கள் விரைவில் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பஸ் போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போது மார்த்தாண்டம் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் முறைப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story