கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் பெண் பரபரப்பு புகார்


கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் பெண் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:15 AM IST (Updated: 19 Jan 2017 11:36 PM IST)
t-max-icont-min-icon

கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த அல்போன்சா (வயது 65) என்ற பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

 கடந்த மாதம், நான் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் ராமன்துறை பகுதியை சேர்ந்த சிலர் என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் என் வீட்டை அடித்து நொறுக்கினர். மேலும் வீட்டில் இருந்த விலைஉயர்ந்த பொருட்களை அடித்து உடைத்தும், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கிழித்தும் எறிந்தனர். என்னையும் அடித்து, உதைத்தனர். மேலும் என்னையும், என் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி சென்றனர்.

இதுதொடர்பாக நான் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

அவருடன் அப்பகுதியை சேர்ந்த சிலரும் வந்திருந்தனர். இதனால் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Next Story