கால்வாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும் எம்.எல்.ஏ.க்கள் மனு
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நேற்று ஒரு மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
கிள்ளியூர் பகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயின் கிளை கால்வாய்களான கருங்கல் கிளை கால்வாய், முள்ளங்கினாவிளை கிளை கால்வாய், பாலூர் கிளை கால்வாய், கீழ்குளம் கிளை கால்வாய், தேவிகோடு கிளை கால்வாய், காட்டுக்கடை கிளை கால்வாய், மிடாலம் கிளை கால்வாய், ஆலஞ்சி கிளை கால்வாய், கப்பியறை கிளை கால்வாய், இலவுவிளை கால்வாய் ஆகியவை உள்ளன.
சிற்றாறு அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்துவிடப்படும் தண்ணீரானது விழுந்தயம்பலம் பகுதிக்கு வந்து கடைவரம்பு பகுதிகளுக்கு பிரிந்து செல்லும். ஆனால், கால்வாய்களில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மண் நிரம்பி உள்ளது. இதனால், தற்போது 12 நாள் ஆகியும் கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
சிற்றாறு பட்டணம் கால்வாய் பாசன பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், கருங்கல் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் நிலமும், விழுந்தயம்பலம் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் நிலமும் விவசாய நிலமாக உள்ளன. எனவே, கால்வாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்து கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

Next Story