கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2-வது நாளாக மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2-வது நாளாக மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கல்லூரி மாணவ மாணவிகள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். அவர்கள் இரவில் கொட்டும் பனியிலும் அங்கேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
2-வது நாளாக போராட்டம்
நேற்று காலையில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியிலிருந்து மாணவ மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டு, பயணியர் விடுதி முன்பு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதேபோன்று சாத்தூர் செவல்பட்டி பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாணவர்களின் போராட்டத்துக்கு அனைத்து அமைப்பினரும், பொதுமக்களும் ஆதரவு தெரிவித்தனர். பெரும்பாலான மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் போராட்டம்
கோவில்பட்டி வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர், வக்கீல்கள் ஜல்லிக்கட்டு காளையுடன் கோர்ட்டு வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, புது ரோடு, எட்டயபுரம் ரோடு, உதவி கலெக்டர் அலுவலகம் வழியாக மீண்டும் கோர்ட்டு வளாகத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம்- விளாத்திகுளம்
எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விளாத்திகுளம் பஸ் நிலையம் வேன் ஸ்டாண்டு பகுதியில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டு நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
கயத்தாறு
இதேபோன்று கயத்தாறு பழைய பஸ் நிறுத்தம் அருகில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாசரேத்
நாசரேத் மர்காஷிஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரியில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, பஸ் நிலையம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, நாசரேத் சந்தை ரோட்டில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாசரேத் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story