சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணி


சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 20 Jan 2017 12:52 AM IST (Updated: 20 Jan 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

செங்குன்றம்,

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் முடிவடைந்தது. முன்னதாக பேரணியை செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேந்திரன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியின் போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். 

Next Story