பாளையங்கோட்டை அருகே துணிகரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களிடம் நகை பறிப்பு


பாளையங்கோட்டை அருகே துணிகரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2017 1:07 AM IST (Updated: 20 Jan 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களிடம் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

நெல்லை,

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களிடம் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

பெண்ணிடம் நகைபறிப்பு

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை அடுத்த உடையார்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் வள்ளித்தாய் (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர்.

வள்ளித்தாய் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளித்தாய் கூச்சலிட்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மற்றொரு சம்பவம்

பாளையங்கோட்டை அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சுப்பம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து சுப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டான்.

இந்த துணிகர சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story