ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி ராஜபாளையத்தில் மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்
ராஜபாளையம்,
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனக் கோரி ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த மருது மற்றும் கண்ணன் ஆகிய தனியார் கல்லூரி மாணவர்கள் அங்குஉள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் போராட்டம் நடத்திய 2 மாணவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அவர்கள் சமாதானம் ஆகி பத்திரமாக கீழே இறங்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story