மதுரை- திண்டுக்கல் இடையே இன்று ரெயில் போக்குவரத்து ரத்து
மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக மதுரை- திண்டுக்கல் இடையே இன்று ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
இது தொடர்பாக திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பகுதியாக ரத்து
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தொடர்ந்து மதுரை- விழுப்புரம் பாசஞ்சர் ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ராமேசுவரம்- மதுரை பாசஞ்சர் ரெயில் மானாமதுரை- மதுரை இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மாற்றுப்பாதை
மாணவர்களின் போராட் டம் காரணமாக ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை, திண்டுக்கல் செல்லாமல் மாற்றுப்பாதையான விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும், புதுச்சேரி- மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு வழியாகவும், கன்னியாகுமரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும், திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும் நேற்று இயக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story